புதன், 19 அக்டோபர், 2011

நண்பனின் கவிதைகள்

நண்பர் கோபித்துகொள்ள மாட்டார் என்ற நம்பிக்கையில் இந்த பதிவு...

கவிதை - 1 

ஒரு நொடியில், உன்
இரு விழிப்பார்வையால்
முப்பரிமாணங்களில்
நால் திசையிலும், என்
இம்புலனையும் ஆலயவிட்டாய்
ஆறு(தல்) தேடி
ஏழு கண்டத்திலும்
எட்டு திசையுலும்
நவகிரகங்களோடு
பத்தாய் அலைய்ந்தேன்
பித்தாய் திரிந்தேன் !


கவிதை - 2

தென்றலின் சதி மேகத்துள் மறைந்தாய்
நீ நிலவில்லை
உன் கூந்தல் கருமேகம்

நிலவில் ஜீவநில்லையாம்
நாசா சொன்னது
நீ நிலவில்லை
உன் நிழல் நிலா

ஒளி வந்ததால் நிழல் மறைந்துதான் போகும்


கவிதை - 3

தெரியாதலால் தேடினேன்
தேடுதலின் சுகம் கொண்டதால் தேடினேன்
தெரிந்துவிடகூடா தென்று தேடினேன்
இன்னும் தேடிக்கொண்டுதானிருக்கிறேன் !!!

இரவுகளில் தேடினேன்
இரவுகள் இரவு வாங்கி தேடினேன்
உறங்கையில் தேடினேன்
உறங்காமல் தேடினேன்
உறக்கங்களில் தேடினேன்
இன்னும் தேடிக்கொண்டுதானிருக்கிறேன் !!!


பின் குறிப்பு : கவிதைகளை மொத்தமாகவும் அல்லது சில்லறையாகவும் வாங்க அணுக வேண்டிய முகவரி LOUIS PAKKIAM (http://www.facebook.com/profile.php?id=100000375858620).


செவ்வாய், 18 அக்டோபர், 2011

பயணம் - 2

என் மனைவி 'தங்கமணி' அமெரிக்கா மாதிரி போகிற போக்கில் வெடிகுண்டு வீசி விட்டு செல்வாள்.

நேற்று இரவு அப்படி ஒரு குண்டு வீசபட்டது , ஆபீஸ்ல்லிருந்து திரும்பிய நான் இரவு உணவறிந்து கொண்டு இருந்தேன்....எனக்கு மிகவும் பிடித்த சாம்பாரும், கருவாடு வறுவலும். ஊருக்கு போகும் சந்தோசமும், பிடித்த சாப்பாடும் சேர்ந்து ஒரு வித ஏகாந்தமான மனநிலையை   உருவாக்கி விட்டிருந்தது. அப்போது தான் 'தங்கமணி', "ஏங்க அவசியம் ஊருக்கு போகனும்மா, பிள்ளைகள் இரண்டும் நீங்க இல்லாம ஏங்கிட போகுதுங்க"  ன்னு முதல் குண்டை வீசினாள். எனக்கோ சாப்பிட்ட கருவாடு எல்லாம் மீனாக மாறி வயிற்றில் துள்ளி குதித்தது, நான் 'தங்கமணி' யை பரிதாபமாக திரும்பி பார்க்க. பிறகு 'தங்கமணி' யே "சரி பரவா இ ல்லைங்க ரெண்டு வாரம் தான போயிட்டு வாங்க" என்று அடுத்த counter யும் கொடுக்க, நான் கப்புன்னு அதையே பிடித்து கொண்டு, வா உடனே பெட்டி ரெடி பண்ணிடலானு கூற, நல்ல மனநிலையில் இருந்த  'தங்கமணி' யும் ஓகே என்றாள்.

பெட்டி கட்டுவதென்பது ஒரு பெரிய கலை அது எல்லார்க்கும் கை வராது அதுவும் எனக்கு சுத்தம்...So தங்கமணிக்கு கூட மாட உதவி செய்து கொண்டு இருந்தேன். ஒவ்வொரு பொருளாக தங்கமணி பெட்டியில் போட, ஜூனியர் தங்கமணி ஒவ்வொன்றாக வெளியேற்றி கொண்டு இருந்தார். ஒரு வழியாக ஜூனியரின் அட்டகாசத்தையும் தாண்டி பெட்டி நிரம்பி ஒன்பது மாத கர்ப்பிணியின் வயறு போல முட்டி கொண்டு வழிந்தது.  பெட்டியின் ஜிப்பை மூட பகிரத பிரயத்தனம் செய்ய வேண்டி இருந்தது. கடைசியாக குடும்ப சகிதமாக பெட்டியின் மீது ஏறி நின்று ஜிப்பை மூடினோம்.

                                                                                                                              --தொடரும்  



ஞாயிறு, 16 அக்டோபர், 2011

பயணம் - 1

அடுத்த வாரம் இந்தியாவிற்கு(Pondicherry ) இரண்டு வார பயணமாக செல்கிறேன். பிரான்சில் வந்து குடியேறி  கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஓடிவிட்டது.  ஒவ் வொரு முறையும் இந்தியாவிற்கு செல்வதற்கு முன் இருக்கும் ஆர்வமமும், குதுகாலமும் ஏர்போர்ட்இல் இறங்கியவுடன் காணாமல் போகிவிடுகிறது .   எதையும் எதிர் பார்த்து காத்து இருப்பதில் உள்ள சுகம் கிடைத்தவுடன் காணாமல்  போயி விடுகிறது போல .

இந்த முறை பயணம் 'தங்கமணி', பிள்ளைகள் இல்லாமல் தனியே. இந்த பயணத்திற்கு என் தங்கமணிஇடம் சம்மதம் வாங்கறதுக்குள்ள என் டவுசர்   கழண்டுருச்சு. சில பல தாஜாக்கள், வாக்குறுதிகளுக்கு பிறகு 'தங்கமணி' திருவாய் மலர்ந்து சம்மதம் அருளினார். சும்மா இல்லைங்க இந்தியாவில்லி ருந்து என்ன என்ன வாங்கிட்டு வரணும்ன்னு பெரிய லிஸ்டே இப்போ என்னுடைய pocket இல்.   தங்கமணிஇடம் சம்மதம் வாங்கிய மறு தினமே  ஆபீசில் இரண்டு வாரம் விடுமுறைக்கு விண்ண பித்தேன், இரண்டு நாள் ஆகியும் எந்த பதிலும் இல்லை. என்னடா இது வம்பா  போச்சின்னு directa என்னோட BOSS இன் காபினுக்கு சென்று என்னோட பொய் மூட்டைய அவிழ்த்து விட்டேன், நான் போகலன்ன pondicherryla மழை பெய்யாது, வெயில் அடிக்காதுன்னு அப்படி இப்படி ன்னு படம் காட்டி விடுமுறைக்கு அனுமதி வாங்கிட்டேன். 

அடுத்த step டிக்கெட் புக் பண்ணனும், அன்று மாலையே GARE DU NORD இல் உள்ள ஒரு travels க்கு சென்றேன், அங்கு கவுன்டரில் கொட்டாவி விட்டு கொண்டு கம்ப்யூட்டர் திரையை முறைத்து கொண்டு இருந்தவரிடும் சென்று தேதிகளை கூறி டிக்கெட் வேண்டும் என்றேன். அவர் மீண்டும் கம்ப்யூட்டர் திரையை  முறைத்து விட்டு கேட்ட தேதிகளில் டிக்கெட் இல்லை என்று வேறு சில தினங்களை பரிந்துரைத்தார். இது வே லைக்கு ஆகாது என்று மனதிற்குள் நினைத்து கொண்டு, வீ ட்டுக்கு போயி ஆயாகிட்ட கலந்து ஆலோசித்து விட்டு வருகிறேன் என்று அங்கிருந்து எஸ் ஆகி வீட்டுக்கு வந்து இன்டர்நெட் பகவானை வேண்டி கொண்டு ஒவ்வொரு ஏர்லைன்ஸ்ஆ தேடி ஒரு வழியா டிக்கெட்ட இண்டர்நெட்ல புக் பண்ணிட்டேன்.

ஆக இன்னும் சில தினங்களில் பாண் டிஇல் ........

                                                                                                                   ----தொடரும்  



வெள்ளி, 14 அக்டோபர், 2011

வணக்கம் வலைதள நண்பர்களே ப்ளாக் ஆரம்பிக்கவேண்டும் என்னும் எனது நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறியது. இங்கு என்னுடைய சில அனுபவங்கள், கருத்துகள் என உங்களுடன்  பகிர்ந்து கொள்ள போகிறேன், but nothing serious . வெகு விரைவில் ஒரு பதிவுடன் உங்களை....சந்திக்கிறேன் என்ன  குறைகள் நிறைகள் இருந்தாலும் தவறாமல் சுட்டி காட்டுங்கள்.