பயணம் - 3
ஒரு சனிக்கிழமை அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தேன், Immigration counter இல் மிக நீண்ட வரிசை, பனிரெண்டு மணி நேர இடை விடாத பயணத்தால் உடல் சிறிது சோர்வாக இருந்தும் மனது உற்சாகமாக இருந்தது. Counter இல் immigration clearance வழங்கி கொண்டு இருந்தவர் ஒரு நடுத்தர வயது பெண்மணி, என் முறை வந்தது அருகில் சென்று சிறு புன்னகையோடு
வணக்கம் கூறினேன், எந்தவித பதிலும் சொல்லாமல் என்னை முறைத்து பார்த்தார் பிறகு passport இல் ஓங்கி seal வைத்தார். அவர் பாஸ்போர்டில் குத்தியது என் முகத்தில் குத்தியது போல் இருந்தது, இதை விட பெரியதாக யாரும் பயணிகளை அவமான படுத்த முடியாது. ஒரு பனிரெண்டு மணி நேர பயண தொலைவில் எவ்வளவு பெரிய கலாச்சார மாற்றம்.
பிறகு எனது பெட்டிகளை அள்ளி போட்டுகொண்டு விமான நிலையத்திலிருந்து வெளியேறினேன். வெளியே கண்கள் அம்மாவை தேடி அலைபாய்ந்தது கூட் டத்தில் அம்மாவை கண்டு பிடிப்பது அவ்வளவ்வு சிரமமாக இருக்கவில்லை. சிறிது நரை கூடி உடம்பு இளைத்து இருந்தாள். அவளை கண்டவுடன் கண்களில் நீர் வேகமாக நிறைந்து தாடையில் சூடாக வழிந்தது. என்னை வாரி அணைத்தாள், அம்மாவின் வாசம் மனதை நிறைத்தது அந்த அதிகாலை என் வாழ்வின் ஒரு உன்னதமான தருனமாக மாறியது.
சிறிது தொலைவில் பால்ய நண்பனும், மாமாவும் நின்று கொண்டிருந்தார்கள் நலம் பரிமாறி கொண்டு பெட்டிகளை carஇல் வைத்து விட்டு வண்டி ஓட்டுநரை எழுப்பினோம். அதிகாலை என்பதால் நல்ல தூக்கத்தில் இருந்தார், எழும்பியவரின் கண்கள் சிவந்து இருந்தது. அவரது தூக்கம் கலையும் வரை
சிறிது நேரம் பேசி கொண்டு இருந்தோம்.
வண்டி pondicherry நோக்கி பயணிக்க ஆரம்பித்தது..சென்னையும் மெதுவாக விழிக்க ஆரம்பித்து இருந்தது . முதல் ஒரு மணி நேரம் அனைவரும் இடைவிடாமல் பேசி கொண்டு இருந்தோம். அதிகாலை காரணமாக அனைவரும் சிறிது சிறிதாக உறக்கத்தில் ஆழ்ந்தனர். என் மனம் மட்டும் விழித்து கொண்டு ஏதேதோ பழைய நினைவுகளை அசை போட்டு கொண்டு இருந்தது. சென்னை புற நகரை தாண்டி வண்டி சென்று கொண்டிருந்தது...நிறைய சிறிய வயது பெண்கள் கூட்டம் கூட்டமாக அந்நேரத்திலும் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்கள். சூடாக ஒரு டீ குடித்தால் நன்றாக இருக்கும் போல தோன்றியது.
ஓட்டுனரிடம் வண்டியை ஒரு டீ கடையில் நிறுத்த சொல்லி அனைவரும் இறங்கி டீ குடித்தோம். என் கண்கள் சாலை ஓரமாக மேய்ந்துகொண்டிருந்தது சாலையின் மறுபக்கத்தில் ஒரு சிறுமி தன் தகப்பனின் கையை பற்றி கொண்டு ஏதேதோ பேசி கொண்டும் சிரித்து கொண்டும் சென்று இருந்தாள்...
பார்க்க மிக ரம்மியமாக இருந்தது....ஏனோ எனக்கு என் மகளின் நினைவு தோன்றி மறைந்தது...மனதில் சொல்லமுடியாத உணர்வு எழந்து அடங்கியது.
எங்கேயோ படித்த ஒரு வாக்கியம் மனதில் தோன்றியது......
"ஒரு பெண்ணை பெறாமல் எந்த தகப்பனின் ஸ்தானமும் முழுமை அடைந்ததில்லை."
பிகு : படித்துவிட்டு கமெண்ட் போடாமல் செல்பவர்களுக்கு முண்டகண்ணி அம்மன் கோவிலில் முட்டை உடைத்து சூனியம் வைக்க படும்.