பயணம் - 1
அடுத்த வாரம் இந்தியாவிற்கு(Pondicherry ) இரண்டு வார பயணமாக செல்கிறேன். பிரான்சில் வந்து குடியேறி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஓடிவிட்டது. ஒவ் வொரு முறையும் இந்தியாவிற்கு செல்வதற்கு முன் இருக்கும் ஆர்வமமும், குதுகாலமும் ஏர்போர்ட்இல் இறங்கியவுடன் காணாமல் போகிவிடுகிறது . எதையும் எதிர் பார்த்து காத்து இருப்பதில் உள்ள சுகம் கிடைத்தவுடன் காணாமல் போயி விடுகிறது போல .
இந்த முறை பயணம் 'தங்கமணி', பிள்ளைகள் இல்லாமல் தனியே. இந்த பயணத்திற்கு என் தங்கமணிஇடம் சம்மதம் வாங்கறதுக்குள்ள என் டவுசர் கழண்டுருச்சு. சில பல தாஜாக்கள், வாக்குறுதிகளுக்கு பிறகு 'தங்கமணி' திருவாய் மலர்ந்து சம்மதம் அருளினார். சும்மா இல்லைங்க இந்தியாவில்லி ருந்து என்ன என்ன வாங்கிட்டு வரணும்ன்னு பெரிய லிஸ்டே இப்போ என்னுடைய pocket இல். தங்கமணிஇடம் சம்மதம் வாங்கிய மறு தினமே ஆபீசில் இரண்டு வாரம் விடுமுறைக்கு விண்ண பித்தேன், இரண்டு நாள் ஆகியும் எந்த பதிலும் இல்லை. என்னடா இது வம்பா போச்சின்னு directa என்னோட BOSS இன் காபினுக்கு சென்று என்னோட பொய் மூட்டைய அவிழ்த்து விட்டேன், நான் போகலன்ன pondicherryla மழை பெய்யாது, வெயில் அடிக்காதுன்னு அப்படி இப்படி ன்னு படம் காட்டி விடுமுறைக்கு அனுமதி வாங்கிட்டேன்.
அடுத்த step டிக்கெட் புக் பண்ணனும், அன்று மாலையே GARE DU NORD இல் உள்ள ஒரு travels க்கு சென்றேன், அங்கு கவுன்டரில் கொட்டாவி விட்டு கொண்டு கம்ப்யூட்டர் திரையை முறைத்து கொண்டு இருந்தவரிடும் சென்று தேதிகளை கூறி டிக்கெட் வேண்டும் என்றேன். அவர் மீண்டும் கம்ப்யூட்டர் திரையை முறைத்து விட்டு கேட்ட தேதிகளில் டிக்கெட் இல்லை என்று வேறு சில தினங்களை பரிந்துரைத்தார். இது வே லைக்கு ஆகாது என்று மனதிற்குள் நினைத்து கொண்டு, வீ ட்டுக்கு போயி ஆயாகிட்ட கலந்து ஆலோசித்து விட்டு வருகிறேன் என்று அங்கிருந்து எஸ் ஆகி வீட்டுக்கு வந்து இன்டர்நெட் பகவானை வேண்டி கொண்டு ஒவ்வொரு ஏர்லைன்ஸ்ஆ தேடி ஒரு வழியா டிக்கெட்ட இண்டர்நெட்ல புக் பண்ணிட்டேன்.
ஆக இன்னும் சில தினங்களில் பாண் டிஇல் ........
----தொடரும்
அன்பரின் பயணத்திற்கு என் வாழ்த்துக்கள், உங்கள் பயணக்கட்டுரைகளை படிக்க ஆவலாய் இருக்கிறோம்.
பதிலளிநீக்குஅடிக்கடி எழுதுங்க.
dey nee kallaikkiriya illa paratriya?
பதிலளிநீக்கு"நான் போகலன்ன pondicherryla மழை பெய்யாது, வெயில் அடிக்காதுன்னு அப்படி இப்படி ன்னு படம் காட்டி விடுமுறைக்கு அனுமதி வாங்கிட்டேன்" :D
பதிலளிநீக்குThanks for ur comments Sudha..
நீக்கு