செவ்வாய், 18 அக்டோபர், 2011

பயணம் - 2

என் மனைவி 'தங்கமணி' அமெரிக்கா மாதிரி போகிற போக்கில் வெடிகுண்டு வீசி விட்டு செல்வாள்.

நேற்று இரவு அப்படி ஒரு குண்டு வீசபட்டது , ஆபீஸ்ல்லிருந்து திரும்பிய நான் இரவு உணவறிந்து கொண்டு இருந்தேன்....எனக்கு மிகவும் பிடித்த சாம்பாரும், கருவாடு வறுவலும். ஊருக்கு போகும் சந்தோசமும், பிடித்த சாப்பாடும் சேர்ந்து ஒரு வித ஏகாந்தமான மனநிலையை   உருவாக்கி விட்டிருந்தது. அப்போது தான் 'தங்கமணி', "ஏங்க அவசியம் ஊருக்கு போகனும்மா, பிள்ளைகள் இரண்டும் நீங்க இல்லாம ஏங்கிட போகுதுங்க"  ன்னு முதல் குண்டை வீசினாள். எனக்கோ சாப்பிட்ட கருவாடு எல்லாம் மீனாக மாறி வயிற்றில் துள்ளி குதித்தது, நான் 'தங்கமணி' யை பரிதாபமாக திரும்பி பார்க்க. பிறகு 'தங்கமணி' யே "சரி பரவா இ ல்லைங்க ரெண்டு வாரம் தான போயிட்டு வாங்க" என்று அடுத்த counter யும் கொடுக்க, நான் கப்புன்னு அதையே பிடித்து கொண்டு, வா உடனே பெட்டி ரெடி பண்ணிடலானு கூற, நல்ல மனநிலையில் இருந்த  'தங்கமணி' யும் ஓகே என்றாள்.

பெட்டி கட்டுவதென்பது ஒரு பெரிய கலை அது எல்லார்க்கும் கை வராது அதுவும் எனக்கு சுத்தம்...So தங்கமணிக்கு கூட மாட உதவி செய்து கொண்டு இருந்தேன். ஒவ்வொரு பொருளாக தங்கமணி பெட்டியில் போட, ஜூனியர் தங்கமணி ஒவ்வொன்றாக வெளியேற்றி கொண்டு இருந்தார். ஒரு வழியாக ஜூனியரின் அட்டகாசத்தையும் தாண்டி பெட்டி நிரம்பி ஒன்பது மாத கர்ப்பிணியின் வயறு போல முட்டி கொண்டு வழிந்தது.  பெட்டியின் ஜிப்பை மூட பகிரத பிரயத்தனம் செய்ய வேண்டி இருந்தது. கடைசியாக குடும்ப சகிதமாக பெட்டியின் மீது ஏறி நின்று ஜிப்பை மூடினோம்.

                                                                                                                              --தொடரும்  



1 கருத்து:

  1. இந்த குண்டுக்கெல்லாம் அசர ஆளா நீங்க..
    இந்த பதிவும் சூப்பர், continue ...

    பதிலளிநீக்கு