நினைவலைகள் - 1 : முதல் பீர் (BEER)
முதல் முத்தம், முதல் காதல் போல முதன் முதலில் குடித்த பீரும் இன்று வரை பசுமையாக நினைவில் இருக்கிறது.
அந்த வரலாற்று நிகழ்வு நடந்தது சுமார் பதினாறு வருடங்களுக்கு முன்னால் அதாவது சரியாக 1996 ஆம் வருடம். அப்போது எனக்கு வயது இருபது புதுவை தாகூர் கலை கல்லூரியில் இளங்கலை ( BSc) கணிதம் மூன்றாம் ஆண்டு படித்து கொண்டு இருந்தேன்.
அக்காலகட்டத்தில் கல்லூரியில் semester system எல்லாம் கிடையாது வருடத்துக்கு 5 தேர்வுகள், மூன்று வருடத்துக்கும் மொத்தமாக சேர்த்து பதினைந்து தேர்வுகள். தேர்வுக்கு பதினைந்து நாட்கள் முன்னால் படித்தால் அதுவே போதுமானது. So, எந்தவித கவலையும் இல்லாமல் இளமை இறக்கை கட்டி பறந்து கொண்டிருந்த காலம். நண்பர்களோடு அரட்டை அடிப்பது, பீச்சுக்கு போவது, சினிமா பார்ப்பது, கிரிக்கெட் விளையாடுவது, நன்றாக தூங்குவது இது எதுவும் இல்லையென்றால் தங்கைகளை வம்புக்கிழுப்பது என்று காலம் மனதிற்கு பிடித்தது போல உற்சாகமாக சென்று கொண்டு கொண்டிருந்தது.
ஒரு பிப்ரவரி மாதம் மதிய நேரம், அப்பொழுதுதான் கல்லூரியிலிருந்து திரும்பி
யிருந்தேன் மதிய உணவை முடித்துவிட்டு தொலைகாட்சியில் உலக கோப்பை கிரிக்கெட் பார்த்துகொண்டிருந்தேன். வயிறு நன்றாக நிரம்பி இருந்ததாலும், மின்விசிரி(FAN) மிதமான தை மாத காற்றை அறை முழுக்க நிரப்பி கொண்டு இருந்ததாலும் கண்களில் தூக்கம் சிறிது சிறிதாக இறங்கி கொண்டிருந்தது. சட்டேன்று அந்த ஏகாந்த அமைதியை கிழித்து கொண்டு BIKE HORN இடைவிடாமல் வாசலில் ஒலித்தது, தூக்கம் கலைந்த எரிச்சலில் கொலைவெறியோடு வாசலுக்கு சென்று பார்த்தேன் நண்பன் நந்திவர்மன் நின்று கொண்டு இருந்தான்.
நண்பனை பற்றி சிறு குறிப்பு:
மிக நெருங்கிய நண்பர்களில் நந்திவர்மனும் ஒருவன் இன்று வரை. எங்கள் நண்பர்கள் வட்டத்தில் BIKE வைத்திருந்தது அவன் மட்டும்தான், நண்பர்களுக்கு செலவு செய்வதிலும், பிரச்சனை என்றால் முன்னுக்கு நிற்பதிலும் அவன் தான் முதன்மையானவன் அதுமட்டுமில்லாமல் ஜொள்ளு விடுவதில் கிட்டதட்ட Phd முடித்து இருப்பவன் அவனிடம் "மச்சான், அந்த பொண்ணு உன்னையே பார்க்குதுடா" என்றால் சர்வநிச்சையமாக அனைவருக்கும் அன்று ஒரு PLATE மசாலா பூரி அல்லது கறி போண்டா GARANTY. இப்படியாக ஒரு வாரத்திருக்கு இரண்டு மசாலா பூரி சாப்பிட்டு கொண்டிருந்த காலம்.
சரி பீருக்கு வருவோம்........
"என்னடா, இந்த நேரத்தில்" என்றேன்,
"மச்சான், MBA entrance result வந்திருச்சுடா" என்றான் சோகமாக,
"நீ ஏன்டா அதுக்கு
சோகமா இருக்க entrance எழுதுனவன் தாண்டா கவலை படனும் " என்றேன்
"மச்சி நானும் எழுதிநேன்டா ஆனா என் பேரு Final listல இல்லைடா, பயங்கர மூட் அவுட்ல இருக்கேன்.. " என்றான்
எனக்கு தூக்கி வாரி போட்டது, "என்னது entrance எழுதினியா சொல்லவே இல்ல" என்றேன்
"இல்ல மச்சி நம்ம கவிதா எழுதினா அதான் நானும்... "
(நண்பனுக்கு கிட்டதட்ட 6 பேப்பரில் அரியர் இருந்தது எல்லாம் இங்க தேவை இல்லாத தகவல் )
"இந்த கவலைய மறக்க
ஏதாவது செய்யன்னும், வா ஒரு பீர் அடிப்போம் " என்றான்.
இருவரும் உடனே கிளம்பி
ஏதாவது ஒரு பாருக்கு செல்ல முடிவுசெய்து,
முதல் முறை என்பதால் PONDY TOWNக்குள் செல்லாமல் சற்று ஒதுக்குபுறமாக உள்ள முத்தியால்பேட்டை 'INTERNATIONAL BAR' ஐ தேர்ந்து எடுத்தோம். பைக்கில் பதினைந்து நிமிடத்தில் பார் வந்தடைந்தோம். பைக்கை சற்று தள்ளி பார்க் செய்துவிட்டு சுற்றும் முற்றும் தெரிந்த முகங்கள்
ஏதாவது
தென்படுகிறதா என்று நோட்டம் விட்டு விறு விறுவென பாருக்குள் நுழைந்
து ஒதுக்கு புறமாக ஒரு மேசையை தேர்ந்தெடுத்து ஒரு HAYWARDS 2000 ORDER செய்தோம். பயந்துகொண்டே குடித்ததால் மிக விரைவாக பீரை காலி செய்துவிட்டு பாரை விட்டு வெளியேறினோம் .
பீர் குடித்துவிட்டோம் என்ற எண்ணமே மனதுக்குள் ஒரு வித திமிரை உருவாக்கி இருந்தது. யாரை பார்த்தாலும் முறைக்க
தோன்றியது சும்மா நெஞ்சை நிமிர்த்தி கொண்டு பீச் ரோட்டில் இங்கும் அங்கும் நடந்து கொண்டே யிருந்தோம். குடித்தது என்னமோ ஒன்றரை டம்ளர் பீர்தான், ஆனா ஏதோ ஒரு FULL அடித்த கெத்தில் அன்று முழுக்க திரிந்தோம். வீட்டுக்கு போகணும் என்ற நினைப்பு வந்தவுடன் அணைத்து OVER REACTIONணும் நொடியில் மறைந்து பயம் தொற்றி கொண்டது. பங்க் கடையில் ROJA பாக்கு வாங்கி வாயில் போட்டும் நம்பிக்கை வராமல் ஆளுக்கு ஒரு CHICLETS PACKET வாங்கி வாயில் போட்டு பல முறை மாற்றி மாற்றி ஊதி பார்த்து கொண்டு ஒரு வழியாக வீடு போய் சேர்ந்தோம்.
இன்றைக்கும் மனதை உற்சாகமாக வைத்து கொள்ள இது போல கடந்த கால நினைவுகள் பெரிதும் உதவுகிறது .
மிகவும் சரியாக சொன்னீர்கள் நண்பரே, அந்த நினைவிகள் இல்லை என்றால் நாம் இந்திரமாக தான் இருந்து இருப்போம்.
பதிலளிநீக்குஅனால் இளநிலை மூன்றாம் ஆண்டு தான் நம்பும் படியாக இல்லை. வழக்கம் போல் மிகவும் சுவாரிசமாக இருந்தது முதல் பீர் போல.